ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் கொரோனாவுக்கு மருந்து கிடைக்கும் எனவும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய வைரஸ்

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா, உலக அளவில் 78 லட்சத்திற்கும் மேலான மக்களைப் பாதித்துள்ளது. இதுவரையில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922 ஆக உள்ளது. 9195 பேர் இதுவரையில் இறந்துள்ள நிலையில், 1,62,379 பேர் கொரோனா பிடியில் இருந்து, சிகிச்சைப் பெற்று, குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இக்கொடிய வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக நாடுகள் பலவற்றில் மருந்து கண்டுபிடிப்பதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆராய்ச்சி வெற்றி

இந்த இக்கட்டான சூழலில், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கொரோனாவை தடுக்கம் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இந்த மருந்து இன்னும் ஓராண்டுக்குள் செயற்பாட்டிற்கு வரும். மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் தெரிவித்திருந்தார்.

விரைவில் மருந்து

முதற்கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, கொரோனாவிற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான இரண்டாம் கட்ட ஆராய்ச்சி மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கொரோனாவுக்கு விரைவில் மருந்து என எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் புரதத்தைப் பரிசோதனை செய்யும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. விலங்குகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்பெற்று வருகின்றது. ஆராய்ச்சி முடிவுகள் வந்தபின் தகவல் தருகிறேன் என்றார்.

இஸ்ரேலிலும் ஆராய்ச்சி

இதனிடையே, மத்திய இஸ்ரேலின் பார் இலன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவின் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸின் ஆன்டிஜன், புரதச்சத்து மற்றும் ஆற்றல் மிகுந்த 2 எபிடோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனதாகவும், இவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் கொரோனாக்கு எதிரான தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here