நடிகை நயன்தாராவின் புகைப்படம் பூஜை அறையில் இருப்பதுபோன்ற மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்

நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலம் போய், தற்போது வீட்டின் பூஜை அறையிலேயே அவர்களின் புகைப்படத்தை வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மாறிவிட்டனர். அந்தவகையில் நடிகை நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபோட்டோ வீட்டின் பூஜை அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மூக்குத்தி அம்மன்’

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் அவதாரமெடுத்திருக்கும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இப்படத்திற்காக நடிகை நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்து நடித்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

அம்மனாக நயன்தாரா

இதனையடுத்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர்.

பூஜை அறையில் நயன்தாரா

சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மன் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நயன்தாரா ரசிகர் ஒருவர் தன்வீட்டு பூஜை அறையில், சாமியோடு சாமியாக நயன்தாராவின் அம்மன் புகைப்படத்திற்கு மாலை போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியானது. அதனை கண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள், தாறுமாறுமாக மீம்ஸ் போட்டு வைரலாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here