நடிகை பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகை

விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமாகி, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், தனது கணவருடன் சேர்ந்து நடித்து ஆல்பம் பாடல்களை வெளியிடுவது, பல ஃபேஷன் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, தங்களது சமூக வலைத்தளங்களில் போட்டோ, வீடியோக்கள் பகிர்வது என படு பிஸியாக இருக்கிறார்.

விலை உயர்ந்த கடிகாரம்

சில மாதங்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருது விழாவில் கணவர் நிக் ஜோனாஸுடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது நிக் ஜோனஸ் அணிந்திருந்த கை கடிகாரம்தான் உலகிலேயே அதிக மதிப்பு மிக்கது என்று பலராலும் கூறப்பட்டு வந்தது. அந்தக் கடிகாரம் தங்கத்தினால் செய்யப்பட்டு, வைரக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. தற்போது, அதன் மதிப்பு என்ன என்பதுதான் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஆடம்பர வாழ்க்கை

இவர்களது சொகுசான ஆடம்பர வாழ்க்கை சினிமாவில் இருக்கும் பலரை வியக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை கணவருடன் சேர்ந்து 144 கோடி ரூபாய்க்கு வாங்கினார் பிரியங்கா. இந்த வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியல் அறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், பார், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன. புதிதாக மூன்று கோடி ரூபாய்க்கு சொகுசு காரை வாங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதுபோல் பல விலை உயர்ந்த ஆடைகள், செருப்புகள், நகைகளை அணிந்து வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியாவின் இன்டர்நெட் சென்சேஷன் என்றால் அது மிகையாகாது.

ரூ. 7.5 கோடி மதிப்பிலான கடிகாரம்

பிரியங்கா சோப்ராதான் இப்படி என்றால், அவரது கணவர் அவரைவிட அதிக மதிப்புமிக்க நகைகளை அணிவதில் விருப்பம் காட்டி வருகிறார். நிக் ஜோனாஸ், கோல்டன் குளோப் விருதின்போது அணிந்திருந்த அக்கடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் 7.5 கோடி ரூபாய் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here