தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நடிகை நயன்தாரா ஹிந்தி பட ரீமேக் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியகியுள்ளது.

உச்ச நடிகை

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருவதால்தான், அவரால் தொடர்ந்து உச்சத்தில் இருக்க முடிகிறது.

நயன்தாரா மறுப்பு

இந்நிலையில், ஹிந்தி பட ரீமேக் வாய்ப்பை நயன்தாரா நிராகரித்ததாக கூறப்படுகிறது. கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான குயின் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் அகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாராவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால் நயன்தாராவோ முடியவே முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.

மற்ற ஹீரோயின்களுக்கு வாய்ப்பு

தெலுங்கில் தட்ஸ் மகாலட்சுமி என்ற பெயரில் உருவான குயின் படத்தில் தமன்னா நடித்துள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியரும், கன்னடத்தில் பருல் யாதவும் நடித்துள்ளனர். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here