கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு நடிகர் ஆர்.ஜே. பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த ஆர்.ஜே. பாலாஜி, தற்போது கதாநாயகனாகவும், இயக்குநராகவும் வளர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ஆர்.ஜே. பாலாஜி, ஆன்லைன் வகுப்புகள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மன உளைச்சல்

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; கடந்த சில வாரங்களாக சின்னக்குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் தினமும் 8 மணி வகுப்பு வைக்கும்போது அந்த மன உளைச்சலை அவர்களால் எப்படி கையாள முடியும். மனரீதியாக, உடல் ரீதியாக பாதிப்பு, கழுத்து, கண் எப்படி பாதிக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். பெரியர்வர்கள் கூட 8 மணி கம்யூட்டரை தொடர்ச்சியாக பார்த்தால் பிரச்சனை வரும் என மருத்துவர்கள் சொல்லும்போது, சின்னக் குழந்தைகள், கல்லூரி படிக்கும் மாணவர்கள் இதை எப்படி கையாள்வார்கள்?

இது சரியா?

இத்தனை நாளா அம்மா அப்பா, ‘போன் பாக்காத, டிவி பாக்காத’ன்னு சொல்லி வளர்த்த நிலையில இப்போ ‘போன பாரு, டிவிய பாரு’ன்னு அவங்க சொல்லும்போது மாணவர்களுக்கும் கஷ்டமா இருக்கும். நாம இப்போ கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும், வருஷம் போகுதே, பாடங்களை முடிக்கணுமேன்னு பள்ளி, கல்லூரிகள் யோசிக்கிறது நியாயமா இருந்தாலும், அதுக்கு தீர்வு இதுவா? காலங்காலமா 8 மணி நேர வகுப்புன்னு ஸ்கூல்ல இருந்தத ஆன்லைன் கிளாசுக்கு நடைமுறை படுத்துறது சரியான்னு பாத்துக்கோங்க. 

நடைமுறை சிக்கல்

ஆசிரியர்களுக்குமே இது பெரிய அழுத்தம் தான். பிற மாநிலங்களில் கிளாஸ் எடுப்பதை வீடியோ பதிவு செய்து குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க. மாணவர்களும் விரும்பும் நேரத்தில் அதைப் பார்க்கின்றனர். மீண்டும் இது குறித்து யோசித்துப் பாருங்க. ஆகையால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கு இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள், மன உளைச்சல்கள் இருக்கின்றன. எனவே இணைய வகுப்புகளை எப்படி நடத்தலாம் என்பதை யோசித்துப் பாருங்கள்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here