பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

பிரபல நடிகர்

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சண்டக்கோழி படத்தின் கன்னட ரீமேக்கான வாயுபுத்ரா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து பையா படத்தின் ரீமேக்கான அஜித், பிச்சைக்காரன் படத்தின் ரீமேக்கான ஐ லவ் யூ அம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் 4 திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மூச்சுத்திணறல், மரணம்

இந்நிலையில், 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திரையுலகினர் இரங்கல்

நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணத்திற்கு கன்னட மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகை மேக்னாவை பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த சிரஞ்சீவி, கடந்த 2017ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். மறைந்த சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜூனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here