ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து நடிகர் ஜெயராம் தற்போது விளக்கமளித்துள்ளார்.

முத்து

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் முத்து. கடந்த 1995ம் அண்டு வெளியான இப்படத்தில், ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். மேலும், மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன், செந்தில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வெற்றிப்படம்

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற முத்து திரைப்படம், ஜப்பானிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் சரத்பாபு வேடத்தில் நடிக்க முதலில் ஜெயராம் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். அதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயராம் கூறியிருந்தார்.

விளக்கம்

முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்ததாகவும், அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதால் அதில் நடிக்க மறுத்ததாகவும் ஜெயராம் விளக்கம் அளித்துள்ளார். 

முக்கிய வேடம்

ஜெயராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here