கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சிறந்த நடிகர்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி, மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

வில்லன்

மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். ஓ மை கடவுளே, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் சிறிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார்.

தேவர் மகன் 2ல் விஜய் சேதுபதி

அடுத்ததாக தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதில் என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கமலுக்கு வில்லன்?

அதன்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தின் கதைப்படி நாசர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here