நடிகை வரலக்ஷ்மிக்கு திருமணம் என செய்தி பரவிய நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர் இது வெறும் வதந்தியே எனக் கூறியுள்ளார்.

சிறந்த நடிகை

தனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை வரலஷ்மி சரத்குமார். சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நெகடிவ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது அவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

திருமணம்?, அதிர்ச்சி

இந்த நிலையில், வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சந்தீப் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார் எனவும் செய்திகள் பரவியது. இதனை அறிந்து நடிகை வரலஷ்மி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வதந்தியே

இதுகுறித்து விளக்கமளித்துள்ள வரலஷ்மி, எனக்கு திருமணம் என்கிற செய்தியை எனக்கே கடைசியாகத்தான் சொல்கிறார்கள். அதே நான்சென்ஸ் வதந்திகள் தான். எனக்கு திருமணம் செய்து வைப்பதில் ஏன் எல்லோரும் இவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள்.

சினிமாவை விட்டு விலகவில்லை

எனக்கு திருமணம் என்றால் நான் மொட்டை மாடிக்கு சென்று கத்தி உலகத்திற்கே கூறுவேன். எனது திருமணம் பற்றி எழுதும் பத்திரிகையாளர்களுக்கு சொல்கிறேன், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை, சினிமாவை விட்டும் விலகவில்லை” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here