ஆண்ட்ரியா நடித்து வரும் ‘கா’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பாடகி, நடிகை

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் தற்போது ‘கா’ என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. நாஞ்சில் இயக்கி வரும் இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

‘கா’

வனப்பகுதிக்குள் நடக்கும் அதிரடி சம்பவத்தை மையமாக வைத்து திரில்லர் படமாக ‘கா’ உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை வரும் 20ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார்.

மாறுபட்ட நடிப்பு

‘கா’ படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்கலாம் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here