பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்

பெரியம்மை (Smallpox) மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத்தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களில் 20 முதல் 40 சதவிகிதத்தினர் இறந்து விடுகின்றனர்.

V. minor கிருமி தாக்கியவர்களில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், ஒன்று அல்லது இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக, 300 – 500 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். 1967-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் பிடிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.

எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.

நிகழ்வுகள்

1811 – பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1861 – ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1900 – கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.

1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

 1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1948 – இஸ்ரேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.

1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

1973 – ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here