நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம் என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் அனைவரையும் கவர்ந்த ரம்பாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. திருமணத்திற்கு பின்பு அமெரிக்காவில் செட்டில் ஆன ரம்பாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கை

தனது குடும்ப வாழ்க்கை குறித்து ரம்பா பேசுகையில், தனக்கும் தனது கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன். சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் பறந்து போய்விடும். எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

நல்ல கதாபாத்திரம்

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பது பற்றி நடிகை ரம்பாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது. எனக்கேற்றவாறு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here