மே 16ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 13-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் பகுதியில் வரும் 16-ந் தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பம்

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி காற்று

குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here