கொரோனா ஊரடங்கு சமயத்தில் இயக்குனர் கெளதம் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி, அதற்கான டீசரை வெளியிட்டுள்ளார்.

வசூலில் சாதனை

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – திரிஷா கூட்டணியில் உருவான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம், காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

வெற்றிப் படம்

சமீபத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் அப்படத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

டீசர் வெளியீடு

இந்நிலையில், நடிகை திரிஷா வீட்டில் இருந்தபடியே கெளதம் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார். ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரம் கார்த்திக் கதாபாத்திரத்திடம் தொலைபேசியில் பேசுவது போல் இந்த டீசர் அமைந்துள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா 2

இதுதொடர்பாக பேசிய கெளதம் மேனன், இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தின் ஒரு சிறிய முன்னோட்டம் எனக் கூறியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் கதையை தயாராக வைத்துள்ளதாகவும், அதில் ஒரு பகுதியை எடுத்துதான் குறும்படம் தயாரித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் குறும்படம் வெளியாகும் எனவும் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here