சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டே, ஆண் நண்பருடன் தேவையின்றி ஊர் சுற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர் வலம், கைது

ஆனால், சர்ச்சை நடிகை பூனம் பாண்டே அவரது காதலருடன், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் வலம் வந்துள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்த போலீசார், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ காரை பறிமுதல் செய்தனர். மேலும், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரை கைது செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பல்வேறு பிரிவுகளின் கீழ் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து #PoonamPandey என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சர்ச்சை நடிகை

கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் இந்த பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here