உலக செஞ்சிலுவை நாள்

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948-ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922-ல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அனுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934-ம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15-வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948-ம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984-ல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

மைக்கல் பெவன் பிறந்த தினம்

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் இடதுகை பேட்ஸ்மேன் மைக்கல் பெவனின் 46வது பிறந்த தினம். “finisher” என்ற புகழுக்குரிய இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1994 முதல் 2004 வரையான காலப்பகுதியில் 18 டெஸ்ட் போட்டிகளிலும், 232 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

நிகழ்வுகள்

1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.

1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.

1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.

1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.

1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here