தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான நந்திதா, தனது மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இளம் நடிகை

‘அட்டகத்தி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’, ‘கபடதாரி’ ஆகிய மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார். அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தில், நந்திதா போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறார்.

பந்தா இல்லை

அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நந்திதா தெரிவிக்கையில், அரவிந்தசாமி என் மனம் கவர்ந்த கதாநாயகன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த கனவு, ‘வணங்காமுடி’ படத்தின் மூலம் நனவாகியுள்ளது. அவர் பந்தா இல்லாமல் பழகினார். நடிப்பு பற்றியும், உடல் ஆரோக்கியம் பற்றியும் நிறைய ஆலோசனைகள் சொன்னார்.

போட்டி, பொறாமை

பொதுவாக ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தால், அவர்களுக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும். ‘வணங்காமுடி’ படத்தில் நான், சிம்ரன், ரித்திகாசிங், சாந்தினி ஆகிய 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறோம். எங்களுக்குள் போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை, எந்தவிதமான மோதலும் இல்லை எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here