மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று…

இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும்  அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து  தெய்வங்களும்  உணர்த்துவதாக இருக்கிறது. அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் இந்த நரசிம்ம அவதாரம். காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். இந்தாண்டு  மே மாதம் 06ம் தேதி அதாவது இன்று  நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் இந்த நரசிம்ம அவதாரம்.  கடவுளிடம் கடும் தவம் புரிந்து சாகா வரம் கிடைக்காது என்பதை அறிந்தும்  அரக்கன் இரணியன் சிவபெருமானிடம் கேட்ட வினோத வரத்தை கேட்டான் அந்த வரமானது, எனக்கு பகல் பொழுதில் மரணம் ஏற்படக் கூடாது, இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது,மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது,மிருகத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது, ஆகாயத்திலும் மரணம் நிகழக்கூடாது, பூமியிலும் மரணம் நிகழக்கூடாது, எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது.என எந்தெந்த வழியில் மரணம் நிகழுமோ அதை எல்லாம் தடுக்கும் வகையில் வரத்தைப் பெற்ற இந்த இரணியன் மக்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தி வந்தான்.

இரணியனின் ஆணவத்தை அழிப்பதற்காக அவதரித்தவர் சிங்க முகமும், மனித உடலும், பெரிய நகங்களுடன், நாராயணனை நம்பி அழைத்த பிரகாலதனை காக்க ஒரு தூனை பிளந்து கொண்டு அவதரித்தார் நரசிம்மர். எனவே தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்தில் வருவார், எந்த இடத்திலிருந்து வருவார் என்று தெரியாது. இருப்பினும் அழைத்த குரலுக்கும், நம்பிக்கையோடு அழைத்தால் வருவார் என்பது நிச்சயம்.இதையே இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற வாக்குக்கு இணங்க இந்நிகழ்வு அமைந்தது.

நிகழ்வுகள்

1527 – ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147 சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்ள்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.

1542 – பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.

1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.

1757 – பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.

1840 – பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது.

1853 – “த லிட்டரறி மிரர்” (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.

1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1860 – கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.

1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1910 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.

1930 – இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here