பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று நடிகர் விஜய்சேதுபதி உருக்கத்துடன் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்
திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 17-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வருவாய் இல்லாததால் பலருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணமில்லாத காரணத்தால் பலர் பசியோடு போராடி வருகிறார்கள்.
உருக்கமான டுவிட்
இதுதொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!!” எனக் கூறியிருக்கிறார்.