மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரகதி

பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரகதி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தார். விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகதி, சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து இருந்தார்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில், தெலுங்கு இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரகதி, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மூத்த காமெடி நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக கூறினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்ததாக கூறியுள்ளார்.

எச்சரித்தேன்

பாலியல் ரீதியாக அவர் மோசமாக நடந்து கொள்வதை உணர்ந்ததாகவும், ஒரு அளவுக்கு மேல் அவரது தொல்லை தாங்க முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரை தனது கேரவனுக்குள் அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் பிரகதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த நடிகர் தன்னிடம் மோசமாக நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here