நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவுக்கு பாதமலர் வரவேற்பு கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க கோரி ஆந்திர மாநில நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிகழ்ச்சியில் ரோஜா

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் குழாய் திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

பாதமலர் வரவேற்பு

அப்போது அப்பகுதி கட்சியினரின் ஏற்பாட்டின்படி ரோஜா காரில் இருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறங்களிலும் ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று ரோஜாவின் பாதங்களுக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிமன்றம் நோட்டீஸ்

இதனை எதிர்த்து கிஷோர் என்ற வழக்கறிஞர் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை கானொலி காட்சி மூலம் விசாரணை நடத்திய நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க கோரி ரோஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ரோஜாவுடன் சேர்ந்து ஊரடங்கை மீறியதாக 4 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here