சென்னையில் இருந்து தேனி சென்ற இயக்குனர் பாராதிராஜா அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை

தேனி மாவட்ட எல்லைகளியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பாரதிராஜாவுக்கு சோதனை

இந்த நிலையில், சென்னையிலிருந்து தேனிக்கு சென்ற பாரதிராஜாவுக்கு மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

14 நாட்கள் தனிமை

இருப்பினும், சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து பாரதிராஜா வந்துள்ளதால் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து தேனி என்.டி.ஆர். நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கான அடையாள நோட்டீஸை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது வீட்டில் ஒட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here