சமீபத்தில் காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை மேக்னா வின்செண்ட், பிரபல நடிகரை 2வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணம்
தமிழ், மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் மேக்னா வின்சென்ட். தமிழில் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டான் டோனி என்பவரை காதலித்து வந்த மேக்னா, அவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
விவாகரத்து
திருமணமான ஓராண்டில் மேக்னா, டான் டோனி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர். டான் டோனி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
2-வது திருமணம் ?
இந்த நிலையில், நடிகை மேக்னாவும் மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்த நடிகர் விக்கி மற்றும் மேக்னா இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.