கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்

இன்று அறிவியல் சார்ந்த சமதர்மக் கோட்பாடுகளை வகுத்து உலகுக்கு அளித்த ஜெர்மானிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் – மே 5, 1818.  சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் சில பக்கங்கள் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே  அமைந்தது. DAS CAPITAL என்ற தலைப்பிலான பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவராக கார்ல் மார்க்ஸ் போற்றப்படுகிறார்.

“உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்”.

இதுதான் மூலதனம் என்ற அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து. இன்று உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைக் காத்திட தொழிற்சங்கங்கள் இருப்பதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ்தான். கார்ல் மார்க்சுக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லை

ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு.

நெப்போலியன் மறைவு

பிரஞ்ச் மன்னன் மாவீரன்   நெப்போலியன் பொனபார்ட் இறந்த தினம் இன்று.   1769 முதல் 1821 வரை வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டின் படைத் தளபதி மற்றும் பிரான்சின் முதல் பேரரசர். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடைபெற்ற போர்களை நடத்தியதன் வாயிலாக முன்னேற்றம் அடைந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படையெடுத்து, வெற்றிபெற்று பல நாடுகளை பிரான்சுக்குக் கீழ் கொண்டுவந்தார். நெப்போலியனின் லட்சியம், விவேகம் மற்றும் திறமையான இராணுவ உத்திகள் மூலம் அவரது பேரரசு விரிவடைந்தது. உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இராணுவ தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

“வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பி க்கையின் மீதி” இதுதான் நெப்போ லியன் என்ற மாவீரனின் தாரக மந் திரமாக இருந்தது. அந்த மந்திரம் தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகரா தியில் கிடையாது” என்பது நெப் போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடி கொ ண்டிருந்த துணிவு, நம்பிக்கை மட்டும் தான்!”

2010ஆம் ஆண்டு – டென்ரா டொட்டின் சதம்

மேற்கிந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க நாள். மேற்கிந்திய மகளிர் அணியின் டென்ரா டொட்டின் ஐ.சி.சி உலகக் கோப்பை

நிகழ்வுகள்

1762 – ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.

1925 – தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.

1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.

1942 – பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.

1944 – மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாசிகளை எதிர்த்து பிராக் நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.

1948 – நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் உயிர் நீத்தார்.

1950 – தாய்லாந்தின் மன்னராக பூமிபால் அதுல்யாதெச் முடி சூடினார்.

1955 – மேற்கு ஜெர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.

1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

2007 – கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here