200 ரூபாய் கொடுத்தால் தன்னுடன் நடனம் ஆடலாம் எனக்கூறி நடிகை ஸ்ரேயா வித்தியாசமான முறையில் கொரோனாவுக்கு நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார்.

சிறந்த நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய், ஜெயம் ரவி உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் அவர் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த ஸ்ரேயாவுக்கு நாளடைவில் படவாய்ப்புகள் குறைந்தது.

கொரோனா நிதி

பின்னர் நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, தற்போது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களிடம் உரையாடி வரும் ஸ்ரேயா, இப்போது வித்தியாசமான முறையில் கொரோனாவுக்கு நிதி திரட்டும் முடிவில் இறங்கியுள்ளார்.

நடனம் ஆடலாம்

சென்னை டாஸ்க் போர்ஸ், தி கைண்ட்நெஸ் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ள ஸ்ரேயா, இந்த அமைப்புகளுக்கு ரூ. 200 கொடுத்து அதன் ரசீதை அனுப்ப வேண்டும் என்றும், அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் தன்னுடன் நடனம் அல்லது யோகா செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here