இந்தியாவில் ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட பிறகு பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட போதும் தமிழகத்தில் திறக்கப்படாததற்கு நன்றி தெரிவித்து பிரபல நடிகை டுவீட் செய்துள்ளார்.

ஊரடங்கில் தளர்வு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பல மாநிலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

குடிமகன்கள் கவலை

தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான கடை திறப்பு குறித்த எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் குடிமகன்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில், டாஸ்மக்கை திறக்காத தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பிரபல நடிகை கஸ்தூரி டுவீட் செய்துள்ளார்.

அரசுக்கு நன்றி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டாஸ்மக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி எனக் கூறியுள்ளார். நான் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் மகிழ்ச்சி என கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here