தமிழக மக்களின் இதயங்களை கவரும் வகையில் புத்தம் புதிய பொலிவுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது புதிய வடிவமைப்பு லோகோவை வெளியிட்டுள்ளது.

புதிய லோகோ

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழ் சின்னத்திரையில் களமிறங்கி 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவும் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும் பிராண்ட் வாக்குறுதியிலிருந்து புத்துணர்ச்சி ததும்ப தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவரும் வகையில் தனது புதிய வடிவமைப்பு லோகோவை வெளியிட்டுள்ளது.

புதிய பரிணாமம்

சாமந்தி பூவில் இருந்து மலரும் இந்த வடிவமைப்பு நமது தமிழக கலாச்சார நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. ‘மனதால் இணைவோம், மாற்றத்தை வரவேற்போம்’ என்ற பிராண்ட் வாக்குறுதியில் வேரூன்றிய ஜீ தமிழின் மாற்றம், இன்றைய நம்பிக்கையான, துடிப்பான நுகர்வோர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் அதே வேளையில் மாற்றத்தைத் தழுவுவதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய பரிணாமம், பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் , வணிக ரீதியாக விளம்பரதாரர்களுக்கு மேம்பட்ட ஒரு புதிய அனுபவுமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஈர்க்கத்தக்க வகையிலான வடிவமைப்பு பார்வையாளர் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளின் டியூன்-இன் விவரங்களை மனதில் தக்க வைக்கிறது.

மங்களகரமாண தொடக்கம்

ஜீ தமிழின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி (CMO) திரு.கார்த்திக் மகாதேவ் “பண்பாட்டில் வேரூன்றிய கன்டென்ட் பிராண்டுகள் மூலம் ஜீ பல மாற்றங்களையும் கொண்டு வந்து சாதனை படைத்து வருகிறது. சாமந்தி பூவுடன் புதுப்பிக்கப்பட்ட ஜீ தமிழின் பிராண்ட் வடிவமைப்பு, தமிழ் பார்வையாளர்களின் வலிமை மற்றும் சுறுசுறுப்புக்கு ஒரு அடையாளமாக உள்ளது, இது மங்களகரமான புதிய தொடக்கத்தின் துடிப்பான வெளிப்பாடாகும் என தெரிவித்தார்.

வலுவான இணைப்பு

சேனலின் வணிக ரீதியான வளர்ச்சி குறித்து பேசிய ஜீ தமிழ் தலைமை சேனல் அதிகாரி திரு. ரமணகிரிவாசன், “கடந்த 15 ஆண்டுகளில், ஜீ தமிழ் ஆனது மக்களின் உணர்வுகள் பற்றிய ஆழமான புரிதலுடன் பார்வையாளர்களுடன் வலுவான இணைப்பை உருவாக்கியுள்ளது. கடந்த 1 வருடத்தில், எங்கள் பிரைம்-டைம் கதைகள் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் பார்வையாளர்களின் பங்கு (U+R), 17% இல் இருந்து 23% ஆக உயர்ந்துள்ளது. ஈர்க்கக்கூடிய கன்டென்ட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எங்கள் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறையின் மூலம் மக்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்த முடியும் என நம்புகிறோம்.

புதிய தொடர்கள்

ஜீ தமிழின் இந்த புதிய டிசைன் முன் எப்போதும் இல்லாத வகையில் வலிமையையும் தன்நம்பிக்கையையும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான வடிவமைப்பு அணுகுமுறையானது ‘சர்க்கிள் ஆஃப் ஸ்பார்க்’ எனப்படும் காட்சி உருவகத்தின் மூலம் உயிர்ப்பிக்கப்படுகிறது. ‘உங்கள் மனம் விரும்பும் மாற்றம் இனிதே ஆரம்பம்’ என்ற கோட்பாடுடன் உங்கள் மனம் விரும்பும் மாற்றத்திற்கு ஒரு நல்ல தொடக்கமாக ஜீ தமிழ் 1 லட்சம் பெண்களை தமிழக முழுவதிலும் உள்ள திருக்கோயில்களில் சந்தித்து அவர்களுக்கு பிரசாதமாக சாமந்தி மலர்களை தந்து இந்தப் புதிய பயணத்தைத் தொடங்க உள்ளது. மேலும், இந்த புதிய வடிவமைப்புகளுடன் ஜீ தமிழின் ரசிகர்கள் இரண்டு அற்புதமான புதிய தொடரையும் கண்டு களிக்கலாம். ஆமாம், நளதமயந்தி மற்றும் சந்தியா ராகம் என இரண்டு புத்தம் புதிய சீரியல்கள் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சர்வதேச அளவில் அரங்கேற்றம்

அதுமட்டுமல்லாமல், ஜீ தமிழின் மிகப்பெரிய விருதுகள் நிகழ்ச்சியான குடும்ப விருதுகள் சர்வதேச அளவில் மிக பிரமாண்டமாக அரங்கேற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்கள் தங்கள் அன்பான நட்சத்திரங்களை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பை வெல்ல உள்ளனர். இந்த பிராண்ட் புதுப்பிப்பு மற்றும் ஜீ தமிழ் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சிகள் அனைத்தும் அதன் வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லும், தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் இதயங்களை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, தமிழ் உள்ளடக்கத்துடனான அவர்களின் தொடர்பு, அவர்களின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் பொழுதுபோக்குக்கான முக்கிய இணைப்பாக ஜீ தமிழ் செயல்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here