தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மோதல் போக்கு

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. எனவே, கூட்டணியை பலப்படுத்தவும், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திலும் பாஜக உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், தேசிய ஜனநாயக  கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சற்றுமுன் வெளியிட்டுள்ள தீர்மானத்தில் அறிவித்துள்ளது.

கூட்டணி முறிவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணிகளில் இருந்தும் விலகிக் கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் எங்களுடைய கழக தெய்வங்கள் ஆன பேரறிஞர் அண்ணா அவர்களையும் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும் எங்களை கொள்கையின் விமர்சித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here