நடிகை டாப்ஸி தான் வாங்கிய புதிய சொகுசு காருடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மாடல் அழகி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான டாப்ஸி, டெல்லியில் பிறந்தவர். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த டாப்ஸியின் தந்தை தில்மோகன் சிங் ஒரு தொழிலதிபர். தாய் நிர்மல்ஜித் பன்னு இல்லத்தரசி. பள்ளி நாட்களில் வாசிப்பதில் மிகவும் கைதேர்ந்த அவர், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். எட்டு வயதிலிருந்தே நடிகை டாப்ஸி கதக் மற்றும் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சியும் பெற்றார். இது மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். டான்ஸ் பயின்றது மற்றும் மாடல் அழகியாக இருந்தது என இவை அனைத்தும் அவரை ஹீரோயின் ஆக்கியது.

முன்னணி நடிகை

தமிழில் தனுஷூக்கு ஜோடியாக ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தனது நடிப்புத் திறமையால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், இந்தியில் ஷாருக்கானுடன் ‘டன்கி’, தமிழில் ‘ஏலியன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இவ்ளோ விலையா?

இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசு காரை நடிகை டாப்ஸி வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி. அந்த புதிய சொகுசு காருடன் டாப்ஸி போஸ் கொடுக்கும் போட்டோவை, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here