நடிகர் மாதவனுக்கு பல வெரைட்டியான உணவுகளை தயாரித்து விருந்து கொடுத்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

வெற்றி இயக்குநர்

துரோகி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. 2016 ஆம் ஆண்டு ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஆண்கள் மட்டுமே இயக்குநராக இருக்க முடியும் இன்று பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில், இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். பாக்சிங் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில், மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் குரு என்ற படத்தை இயக்கினார் சுதா.

செம விருந்து

2020 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இந்தத் திரைப்படமும் மக்கள் மத்தியில் வேற லெவலில் ரீச் ஆனது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தேசிய விருதையும் இந்த திரைப்படம் தட்டிச் சென்றது. இந்த படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார் சுதா. சமீபத்தில் விபத்தில் சிக்கிய சுதாவுக்கு கையில் காயம் ஏற்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுகள் செய்து விருந்தளித்துள்ளார் சுதா. கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த விருந்து உபசரிப்பு நடந்துள்ளதா? அல்லது சுதா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்க உள்ளாரா? எதனால் இந்த உபசரிப்பு என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here