ஷாருக்கானும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக “ஜவான்” படத்தில் நடித்து வரும் நயன்தாரா, தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக “இறைவன்” படத்தில் நடித்திருக்கிறார். தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் ஆனதால், இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளது. தற்போது அடுத்தடுத்து கதைகளை கேட்டு வரும் நயன்தாரா, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கசிந்த காட்சி

பதான் பட ஹிட்டுக்கு பிறகு ஷாருக்கான் ‘ஜவான்’ பட ஷூட்டிங்கில் முழுமையாக இறங்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் ரிலீஸ் தேதி, டீசர் என்று ஏதாவது தகவல் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஒரு பாடல் காட்சியின் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. சொகுசு கப்பலில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் காட்சியில் ஷாருக்கானும், நயன்தாராவும் நடனமாடுகின்றனர். பலத்த பாதுகாப்பு மத்தியில் இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், பாடல் காட்சி எப்படி கசிந்தது என்று பட குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த பாடல் காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் பட குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கசிந்துள்ள ஒரு சில காட்சிகளே பிரமாண்டமாக இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்ற ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here