தனது காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்குவதற்காக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

ஃபேன்சி எண்கள்

கார், பைக் வாங்குவதில் பலருக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கின்றது. அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து புது புது மாடல்களில் கார் வாங்கி வீட்டில் வைப்பதும் உண்டு. புதுரக வாகனங்களை வாங்கி குவிப்பது ஒரு ரகம் என்றால், அதற்கு ஃபேன்சி எண்களை வாங்குவதும் தனி ஸ்டைல் ஆகவே இருந்து வருகிறது. தாங்கள் வைத்திருக்கும் அனைத்து வாகனத்திற்கும் ஒரே மாதிரியான எண்களை பலர் வாங்குகின்றனர். அதற்காக ஆயிர கணக்கில் செலவும் செய்கின்றனர். வாங்கி இருக்கும் வண்டியின் மதிப்பை பொறுத்தும், நம்பரை பொருத்தும் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

செலவு செய்த சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவியும் பல லட்சங்கள் கொடுத்து ஃபேன்சி நம்பரை வாங்கியுள்ளார். தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் சிரஞ்சீவி. வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் ‘எம் யு வி’ ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். அந்த காருக்காக ‘1111’ என்ற எண்ணை கேட்டு வாங்கியுள்ளார். அதற்காக அவர் ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும், அவர் வைத்திருக்கும் கார்கள் அனைத்திற்கும் ‘1111’ என்ற எண் தான் இருக்கிறதாம். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து கார்களை வாங்கி குவிப்பார்கள். புதுப்புது ரக கார் ஏதாவது மார்க்கெட்டுக்கு வந்தால் உடனே அதனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவார்கள். தற்போது சிரஞ்சீவி இந்த கார் வாங்கி இருப்பதும், நம்பருக்காக செலவு செய்திருப்பதும் சமூக வலைதளத்தில் பேச்சுப் பொருளாக மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here