‘டிஎன்ஏ’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நடிகை ராய் லட்சுமி அப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

கவர்ச்சி நடிகை

2005 ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், வாமணன், நான் அவன் இல்லை 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட, ராய் லட்சுமி 15 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தும் தமிழில் முன்னணி நடிகையாக வர இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக வெறும் கவர்ச்சி நடிகையாகவே இருந்து வந்த அவர், சமீபத்தில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார்.

எதார்த்தமான போலீஸ் அதிகாரி

15 ஆண்டுகளாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ராய் லட்சுமி, தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தயாராகி வரும் ‘டிஎன்ஏ’ என்கின்ற திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இதில், அஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

சவாலாக இருக்கிறது

இதுகுறித்து நடிகை ராய் லட்சுமி கூறுகையில், “தென்னிந்திய படங்களில் நான் ஏற்கனவே முத்திரை பதித்துள்ளேன். மலையாள சினிமாவில் நடித்தால் சிறந்த நடிகர் என்று பொதுவாக கூறுவது உண்டு. அதற்கு காரணம் சிம்பிளாக இருக்கும் கதைகள் தான். ஆனால் மிகப்பெரிய ஹிட்டும் அங்கு தான் கொடுப்பார்கள். இப்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் நான் நடிக்கிறேன். போலீஸ் அதிகாரியாக நான் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடிப்பது சவாலாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here