நடிகர் ராம் சரணின் 16வது படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்தடுத்து படங்கள்

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் தனது வெற்றியை நிலைநிறுத்திக் கொண்டவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

பல வருடங்கள் கழித்து

‘கேம் சேஞ்சர்’ படத்தை தொடர்ந்து, தனது 16 வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் ராம் சரண். இந்த படத்தை புச்சி பாபு சனா இயக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ‘சீதாராமம்’ புகழ் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றதது. இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here