வினுஷா தேவியும், ஃபரீனாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை மாற்றம்

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கென்று ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொடரின் சீசன் 1 முடிந்து, தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது. ஆரம்பத்தில் இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி திடீரென்று தொடரில் இருந்து விலகினார். மேலும் இந்த தொடருக்காக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தான் இழந்ததாக கூறியிருந்தார் ரோஷினி. ரோஷினி தொடரைவிட்டு விலகிய பிறகு வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் கண்ணம்மா கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

நெருங்கிய தோழிகள்

பாரதி கண்ணம்மா தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா. வெண்பா என்ற கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். பாரதி பாரதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை பாரதி பின்னால் சுற்றி வந்த வெண்பா, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கி வருவதாக ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னதான் தொடர்களில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும், நிஜத்தில் கண்ணம்மா என்கின்ற வினுஷா தேவியும், ஃபரீனாவும் நெருங்கிய தோழிகள். அடிக்கடி இருவரும் ரீலிஸ் வீடியோக்களையும், ஒன்றாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்கள். அதேபோல் தான் சமீபத்தில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போஸ்டுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here