அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து டுவிட்டரில் தன் கணவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் நடிகை குஷ்பு.

வெற்றி இயக்குநர்

முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. அதன்பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர் என்று தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. 90களில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்த சுந்தர் சி, தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

காதல் ஜோடி

வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஒரு நடிகராக இருப்பதைவிட இயக்குநராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதற்கு காரணம் இவரது ஆரம்ப காலத்தில் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப திரைப்படங்களாக அமைந்தது தான். கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சுந்தர்.சி. வெற்றிகரமாக திருமண வாழ்க்கையில் 23 ஆண்டுகள் கடந்த சுந்தர்.சி மற்றும் குஷ்பு ஜோடி இன்றும் காதல் ஜோடிகளாகவே உள்ளனர். அடிக்கடி தன் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார். இந்நிலையில் தன் கணவர் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் நடிகை குஷ்பு.

கணவரின் அடையாளம்

சுந்தர் சி இயக்கிய ‘அருணாச்சலம்’ திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார் குஷ்பு. அவர் பதிவிட்டுள்ள பதிவில் “சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாகும். என் கணவர் 27 வயதாக இருக்கும்போதே ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்க்கையில் ஒரு அடையாளமாக இருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here