விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஷூட்டிங் பிஸி

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக்கொண்டே, அடுத்த படத்தில் நடித்து வரும் விஜய், வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த உடனேயே லியோ திரைப்படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று சொல்லப்படுகின்றது.

சுற்றுப்பயணம்

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளதாக கூறுகின்றனர். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ள தெரிகிறது. இந்த உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அரசியல் என்ட்ரி

புஷ்ஸி ஆனந்த் சுற்றுப்பயணத்தை முடித்து வந்ததும், விஜய் டூர் செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். தனது இயக்கத்தை பலப்படுத்தும் பணியில் நடிகர் விஜய் இறங்கியுள்ளதால், விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரணத்தினால் தான் சமூக வலைதளத்தில் டுவிட்டரில் மட்டும் இருந்து வந்த நடிகர் விஜய், தற்போது இன்ஸ்டாவிலும் கணக்குத் துவங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here