படையப்பா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து #padayappa24 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

உலக சாதனை

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் படையப்பா. இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் #Padayappa24 என்ற ஹேஷ்டாக் உடன் சமூக வலைதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படமாகவும் இப்படம் இருந்தது. படையப்பா திரைப்படம் அப்போதே உலகம் எங்கும் 210 பிரிண்ட்டுகளையும், ஏழு லட்சம் ஆடியோ கேசட்டுகளையும் வெளியிட்டு இருந்தனர்.

நீலாம்பரி வெற்றி

படையப்பா படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், லக்ஷ்மி என்று ஒரு பக்கம் நடிப்பில் அசத்தி இருந்தாலும், இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தான். வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த விதம்தான் இன்றும் அவரை முன்னணி நடிகைகள் லிஸ்டில் வைத்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளது. நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ரம்யா கிருஷ்ணன் போல் யாரும் இதுவரை இல்லை என்று சொல்லலாம். நீலாம்பரியின் குரலும், அந்த கேரக்டரில் நடித்திருந்த விதமும் வில்லத்தனத்தின் உச்சம்.

இன்றும் நிலைக்கும் வசனம்

படையப்பா படத்தில் இடம் பெற்றிருந்த சென்டிமெண்ட், சண்டை காட்சி, காதல், பழி வாங்குதல் உள்ளிட்ட அனைத்தும் கச்சிதமாக பொருந்தி இருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இளம் வயது ரஜினி மற்றும் நீலாம்பரி கதாபாத்திரத்தை விட, வயதான தோற்றத்தில் இருக்கும் ரஜினியும், நீலாம்பரியும் ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றனர். “வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகல”, “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது”, “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”, “என் வழி தனி வழி” உள்ளிட்ட பல வசனங்கள் இன்றும் பிரபலமானவை. இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் படையப்பா திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் ரஜினியின் ரசிகர்களும், நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here