லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரௌத்தாலா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கூறுகின்றனர்.

லெஜெண்ட் ஹிட்

ஹிந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ஊர்வசி ரௌத்தாலா, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரௌத்தாலா, கடந்தாண்டு வெளியான லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். விவேக், சுமன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

காதலில் உள்ளாரா?

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி ரெளத்தாலா, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த தகவலையும் இவர்கள் வெளியிடவில்லை. சமீபத்தில் நடிகை ஊர்வசி ரௌத்தாலா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதனால் இருவரும் காதலில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரையும் நசீமையும் வைத்து ரசிகர் உருவாக்கிய வீடியோவை பகிர்ந்துள்ள அவர், இதுகுறித்து எந்த செய்தியையும் எழுத வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here