பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு தைவான் மற்றும் தென் ஆப்ரிக்கா பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள சில இடங்களை பார்வையிட்டு அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அந்த வகையில், தற்ப்போது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், கமல் தபேலா வாசிப்பது போல் ஒரு பாத்திரத்தை கொண்டு வாசிக்கிறார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here