ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சரிகமப’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ரமணியம்மாள் பாட்டி திடீரென உயிரிழந்துள்ளார்.

சின்னத்திரை பிரபலம்

ஜீ தமிழில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் ‘சரிகமப’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த பாடகர்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சி, பல முன்னணி பாடகர்களை உருவாக்கி உள்ளது. அந்த வகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரமணியம்மாள். சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல பாடகர்களுக்கு டஃப் காம்பெடிஷன் கொடுத்து வந்து ரன்னர் ரப் ஆனார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியதுடன், இஅவரை ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

திடீர் மறைவு

சினிமாவில் இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடிகர் கரண் நடிப்பில் வெளியான ‘காத்தவராயன்’ படத்திலும், விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’, விஷாலின் ‘சண்டைக்கோழி 2’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ சூர்யாவின் ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் பாட்டு பாடி உள்ளார் ரமணியம்மாள். 42 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் பாட்டி இன்று திடீரென மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரமணியம்மாள் மறைந்த செய்தியை கேட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here