பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்கள் (நெபாடிசம்) பற்றி குற்றம் சாட்டியுள்ளார் நடிகை நீது சந்திரா.

விஷால் படத்தில் பிரபலம்

2003 ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நீது சந்திரா. அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு ‘கரம் மசாலா’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு டிராபிக் சிக்னல், 1 2 3, 13 பி, மும்பை கட்டிங், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்தார். யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகி இருந்தாலும், தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆதி பகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நீது சந்திரா.

வெளியே வந்த பிரியங்கா சோப்ரா

நடிகை நீது சந்திரா ஹிந்தி சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்த சமயத்தில் பூதாகரமாக வெடித்த நெபாட்டிசம் சர்ச்சையில் இருந்து இன்றும் ஹிந்தி சினிமா மீண்டு வரவில்லை. அந்த அளவிற்கு நெபாட்டிசம் சர்ச்சை ஹிந்தி திரையுலகை திருப்பி போட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னை ஹிந்தி திரையுலகினர் ஓரம் கட்டியதாகவும், அதற்காக ஒரு கும்பல் சதி செய்ததாகவும், அந்த அரசியல் தாங்க முடியவில்லை என்பதால் ஹிந்தி படங்கள் நடிக்காமல் ஹாலிவுட் படங்களுக்கு சென்றதாகவும் கூறியிருந்தார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய பிரியங்கா சோப்ராவிற்கு இந்த நிலை என்றால் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் நிலை மிகவும் கஷ்டம் தான்.

போராட வேண்டி இருக்கு

சமீபத்தில் நடிகை நீத்து சந்திராவும் ஹிந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த பிரச்சனை ஒருவருக்கு மட்டும் இல்லை, எல்லோருக்குமே இதே நிலைமை தான். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை என்றால் பட வாய்ப்புக்காக போராட வேண்டி இருக்கும். ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலும் அது நீண்ட காலத்திற்கு பிறகு தாமதமாக தான் கிடைக்கும். ஒரு வாய்ப்புக்காகவே பல நாட்கள் போராட வேண்டி இருக்கிறது. இதனை நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட பலரும் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி யாரும் பேச முன் வருவது இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here