ரோபோ சங்கர் உடல் எடையை குறைந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் அவரது அண்ணன் மகள் இந்து சிவராமன்.

காமெடி நடிகர்

ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதைதொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர், காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி, வேலைக்காரன், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, தி லெஜண்ட், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகள் இந்திரஜா ஆகியோர் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

மஞ்சள் காமாலை?

இந்திரஜா சங்கர் அடிக்கடி தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்தாரா? அல்லது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சிவராமன் படத்தில் நடிப்பதற்காகவே ரோபோ சங்கர் உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார். மேலும் வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்றபோது லேசான மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் சோர்வாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரோபோ சங்கரின் மனைவி படத்தில் நடிப்பதற்காக தான் உடல் எடை குறைத்தார் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது இவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here