அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென குடிநீர் சேவை நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த நடிகை ஷகிலா குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினார்.

பாதிக்கப்படும் மக்கள்

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்த குடியிருப்பில் பராமரிப்பு தொகையாக வீட்டிற்கு 2500 ரூபாயும், பேச்சுலர்களிடம் மட்டும் 9000 ரூபாய் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் பல இளம் பெண்களும் பங்கேற்றனர். பேச்சுலரிடம் வசூலிக்கப்படும் தொகை சிலரால் கொடுக்க முடியாததால் அவர்களின் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் சேவை நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் பக்கத்து வீட்டில் இருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தினாலும் அங்கேயும் தண்ணீர் நிறுத்தப்படும் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆவேசமான ஷகீலா

பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக நடிகை ஷகீலா குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளார். மேலும் அங்கிருந்து வீடியோவில் பேசிய நடிகை ஷகீலா, “இந்த காலத்திலும் இப்படி நடக்கிறதா என்று நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மீடியா முன் உட்கார்ந்து பேசுவதால் எதுவும் நடந்துவிடாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அனைவரும் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும். இன்று நான் இவர்களுக்காக வந்திருக்கிறேன். இதற்கு ஒரு நியாயம் கிடைக்காமல் போக மாட்டேன்” என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here