ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நடிகை சிம்ரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஆரம்பத்திலேயே ப்ளாக் பஸ்டர்

ஏப்ரல் 4ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சிம்ரன். 1997 ஆம் ஆண்டு நடிகையாக தனது கெரியரை துவங்கிய சிம்ரன், விஐபி, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள் என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து, ஆரம்பத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். இவரது எதார்த்தமான நடிப்பும், ஸ்டைலான நடனமும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இன்றும் இருந்து வருகிறார் சிம்ரன். ஹீரோக்களுக்கு சரிசமமாக நடனமாடும் நடிகைகளின் லிஸ்டில் நம்பர் 1இல் இருப்பவர் சிம்ரன்.

டான்சில் நம்பர் 1

துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கனவே கலையாதே, ஜோடி, டைம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட பல படங்களை ஹிட் கொடுத்தார். இது மட்டும் இல்லாமல் எதிரும் புதிரும் படத்தில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலில் ஆடி ரசிகர்களை ஏங்க வைத்தார். சிம்ரன் ரசிகர்களின் ஃபேவரிட் ஹிட் லிஸ்டில் அந்த பாடல் கண்டிப்பாக இன்றும் இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு அந்த பாடலும், நடனமும் பிரபலமானது. பம்மல் கே சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.

திருமணத்திற்கு பிறகும் ஹிட்

2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார் சிம்ரன். அதன்பிறகும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர், வாரணம் ஆயிரம், பேட்ட, ராக்கெட்டரி, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் ‘துருவ நட்சத்திரம்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட திரைப்படங்களும் வெளிவர தயாராக உள்ளது. தமிழில் மட்டும் 50 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார் சிம்ரன். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கலக்கி வந்தார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எவர்கிரீன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் சிம்ரன். எத்தனை நடிகைகள் புதிதாக வந்தாலும் சிம்ரனின் புகழை ரசிகர்கள் இன்றும் கூறி வருகின்றனர். இன்று சிம்ரன் பிறந்தநாள் என்றவுடன் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் சிம்ரனின் பிறந்த நாளையொட்டி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here