நடிகர் கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.

ஏற்றமும் இறக்கமும்

என் காதல் மனைவி, தான் என்னுடைய பெரிய பலம். எப்போதும் நான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர், அதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. நான் அவருக்கு ஒரு துணையா நிற்க ஆசைப்படுகிறேன். அவர் என்னிடத்திலும், நான் அவரிடத்திலும் அப்படி தான் ஆசைப்படுகிறோம். இது ஒரு அழகான கூட்டணி. என்னுடைய இந்த 10 ஆண்டு பயணம், நம்ப முடியாததாக உள்ளது. என்னுடைய தொடக்கமே பிரமாண்டமாக இருந்தது. அதன் பின் நிறைய ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தது தான். ஒவ்வொரு முறை சரிவு வரும் போது, புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

ப்ராக்டிகல் மனைவி

மக்கள் என்ன மாதிரி ரோல் பண்ணாலும், என்னை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியானது தான். என்னுடைய மனைவி தான், என்னுடைய பார்ட்னர். என் தொடர்பான எல்லாவற்றையும் என் மனைவியிடம் ஆலோசிக்கிறேன். அப்படி தான் ஒரு ஸ்கிரிப்ட் வரும் போது, அதையும் என் மனைவியிடம் ஆலோசிக்கிறேன். என்ன இருந்தாலும், அவங்க ஒரு நடிகை, நான் ஒரு நடிகன். ஆலோசனைகள் வேறு, முடிவு வேறு. எனக்கான ஸ்கிரிப்ட் வரும் போது, அவற்றை நான் தான் முடிவு செய்கிறேன். ஆனால், இருவருமேஆலோசிப்போம். என் மனைவி பயங்கரமாக ப்ராக்டிகலா இருப்பாங்க, நல்ல முடிவுகளை எடுப்பாங்க.

வில்லன் தான் பெஸ்ட்

எனக்கு பிடித்த நடிகர் என் அப்பா தான். என் அப்பா, மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். நான் ஒரு வாரிசு நடிகர், அவரோட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எந்த எண்ணத்தையும் வளர்க்கவில்லை. நிறைய பேர் வந்து சொல்வார்கள், ‘அப்பா மாதிரி ஆகணும்’ என்று. ‘நான் என்னை மாதிரி தான் ஆக வேண்டும்’ என்று நினைத்தேன். என்னை மாதிரியே அப்பாவுக்கும் ஆரம்பத்தில் இந்த சிரமம் இருந்தது. தாத்தா மாதிரி வர வேண்டும் என்று அவருக்கு பலர் கூறியுள்ளனர். ஆனால், அவர் அவராக வர முயற்சித்தார்.கடந்த ஒன்றரை வருடமாக ஸ்கிரிப்ட் செலக்‌ஷனில் ஈடுபட்ட போது, வில்லன் ரோல் வராத என்று தான் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த மாதிரி ரோல் தான் தேவைப்படுகிறது. நான் வில்லனாக இருந்தால், பகத் ஃபாசில் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்,”
என்று அந்த பேட்டியில் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here