ரோஜா தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தனது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ரோஜா நாயகி

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் இவர் ரோஜா தொடரில் நடிக்கும் பொழுதே பல ரசிகர்களைப் பெற்றார். ரோஜா தொடரில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது சீதாராமன் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரகசிய திருமணம் இல்லை

இந்நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் பிரியங்கா நல்காரி திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார் பிரியங்கா. சிம்பிளாக நடந்த இவர்கள் இருவரின் திருமணத்தில் யாருமே இல்லாமல் இவர்கள் இருவர் மட்டுமே மாலையும் கழுத்துமாக கோவிலை சுற்றி வந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்தில் யாரும் பங்கேற்காததை பார்த்து காதல் திருமணமா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இன்னும் சிலர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்களை பரப்பி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியங்கா நல்காரி விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவில்,” எங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டுள்ளோம். ராகுல் வீட்டில் எங்களை ஏற்காத நிலையில் எங்களை ஏற்றுக் கொண்டவுடன் திருமண நிகழ்வை இருவரும் கொண்டாடுவோம். எங்கள் திருமணத்தை ரகசிய திருமணம் என்று கூறுவதை மீடியாக்கள் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here