லியோ படத்தின் ஷூட்டிங் நாளை சென்னையில் துவங்க உள்ளது.

பிஸி டீம்

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. லியோ படத்தில் விஜயுடன் இணைந்து, த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குநர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தார்.தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களை வரிசையில் வைத்துள்ளார்.

மீண்டும் துவக்கம்

இந்நிலையில் இப்படத்தில் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய், நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியாது. அதன் பிறகு நடிகர் சஞ்சய் தத்துடன் விஜய் பேசுக்கொண்டிருக்கும் புகைப்படமும், அதன் வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. சமீபத்தில் காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்த லியோ டீம், சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு நாளை மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை துவங்க உள்ளது. இது குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here