மறைந்த நடிகர் ரகுவரனின் நினைவு நாளையொட்டி அவரது மனைவியும், நடிகையுமான ரோகினி டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரிந்த மனைவி

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லன்கள் லிஸ்டில் முன்னணியில் இருந்தவர் ரகுவரன். இவர் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுவரன். அதன்பிறகு பூவிழி வாசலிலே, அஞ்சலி, காதலன், லவ் டுடே, ஆஹா, நேருக்கு நேர், அமர்க்களம், முகவரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்து வைத்துக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் பாட்ஷா படத்தில் கேங்ஸ்டராகவும், முதல்வன் படத்தில் அரசியல்வாதியாகவும் நடித்து மிரட்டினார் ரகுவரன். இவரது குரலுக்கும், ரியாக்ஷனுக்கு மட்டுமே பல ரசிகர்கள் இவருக்கு அடிமையாக இருந்தனர். 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திடீரென உடல்நிலை குறைவு காரணமாக ரகுவரன் உயிரிழந்தார். நடிகர் ரகுவரன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளிவந்தது.

உருக்கமான பதிவு

ரகுவரனின் நினைவு நாளையொட்டி அவரது மனைவியும், நடிகையுமான ரோகினி டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டு இருப்பதாவது , “2008 மார்ச் 19ஆம் தேதி சாதாரண ஒரு நாளாக தான் விடிந்தது. ஆனால் அன்று ரகுவரன் உயிரிழந்தது என்னையும் ரிஷியையும் மொத்தமாக மாற்றி போட்டது. ரகு இப்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்தக்கட்டத்தை மிகவும் நேசித்து இருப்பார். ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என நடிகை ரோகினி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் எமோஷனலாக தங்களது கருத்துக்களை கமெண்ட் மூலம் பதிவிட்டு வருகின்றனர். 1996ல் திருமணம் செய்துகொண்ட ரகுவரனும் ரோகிணியும் 2004ம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here