பாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் பிறந்தநாளான இன்று அவரை பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் காண்போம்.

7 ஆண்டுகள் ஒப்பந்தம்

எலிசபெத் டெய்லர் 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி லண்டனில் உள்ள ஹாம்ஸ்டெட்டில் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. இதனால் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என இருநாட்டு குடியுரிமை பெற்றார் எலிசபெத் டெய்லர். எலிசபெத் டெய்லர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பேசும் படமான தேர்ஸ் ஒன் பார்ன் எவ்ரி மினிட் (There’s One Born Every Minute ) என்ற படத்தில் நடித்தார். லாஸ்ஸி கம் ஹோம் (Lassie Come Home) என்ற படத்தின் மூலம் பிரபலமான இவரை, எம்ஜிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்கள் படங்களில் நடிக்க ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தது.

8 முறை திருமணம்

எம்ஜிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 1944ஆம் ஆண்டு வெளியான நேஷனல் வெல்வெட் (National Velvet) என்ற திரைப்படத்தில் டெய்லர் ஏற்ற கதாப்பாத்திரம் அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. தொடர்ந்து அவர் நடித்த கரேஜ் ஆப் லாஸ்ஸி, லைப் வித் பாதர், சிந்தியா, எ டேட் வித் ஜூடி, ஜூலியா மிஸ்பிஹேவ்ஸ் ஆகிய அனைத்து படங்களுமே வெற்றி படமாக அமைந்தது. 1970களுக்கு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். எலிசபெத் டெய்லர் 7 கணவர்களுடன் 8 முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். எலிசபெத் டெய்லர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார். இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2011 ஆண்டில் தனது 79ஆவது வயதில் எலிசபெத் டெய்லர் காலமானார். இவர் பயன்படுத்திய பல பொருட்கள் பல கோடி ரூபாய் கணக்கில் ஏலம் விடப்பட்டும் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here